தமிழ்நாடு விவசாயம்: அதிக வருவாய் தரும் விதைப்பண்ணை அமைப்பது எப்படி? விதைப் பண்ணைகள் மூலம் விவசாயிகள் மேம்பட்ட வருவாய் ஈட்ட முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக நாமக்கல் மாவட்டம் உருவாகியிருக்கிறது. கூடுதல் வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டுமல்லாமல், பருவநிலையும் அவர்கள் விதைப் பண்ணைகளை தேர்வு செய்ய காரணமாக உள்ளது. நெல், நிலக்கடலை, துவரை, பாசிப்பயறு, ஆமணக்கு உள்ளிட்ட அனைத்து பயிர்களின் விதைகளையும் உற்பத்தி செய்து, ஆண்டு முழுவதும் வருமானம் பெறுவதாக இவர்கள் கூறுகின்றனர். தோட்டக்கலை கருவிகள் தொகுப்பு வாங்க இங்கே கிளிக் செய்யவும் விதைப்பண்ணை அமைப்பது எப்படி? விதைசான்றுத் துறை, விதைச்சட்டம் 1966 பிரிவு 8ன்படி கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்கும் வகையில் 1979ம் ஆண்டு முதல் விதைப்பண்ணை முறை செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் தரமான விதைகளுக்கு சான்று அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் விதைப்பண்ணை திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த விதைப்பண்ணைகளில், மத்திய அரசு அனுமதித்துள்ள விதைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படு...