முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதலும் மேலாண்மை முறைகளும்

  தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதலும் மேலாண்மை முறைகளும் தென்னை வளர்ப்பில் பூச்சி, நோய்த் தாக்குதல் உழவர்கள் நெடுங்காலமாகச் சந்தித்து வரும் பிரச்சினை. சுமார் 800 பூச்சியினங்கள் தென்னையைத் தாக்கிச் சேதத்தை விளைவித்து வந்தாலும் காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன் வண்டு, கருந்தலைப் புழு, எரியோபிட் சிலந்தி, சுருள் வெள்ளை ஈ போன்றவை தென்னைச் சாகுபடியில் பெரும் சேதத்தை விளைவிக்கக்கூடியவை. இந்த வெள்ளை சுருள் ஈ பற்றியும் அதன் மேலாண்மை முறைகள் குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம். அமெரிக்காவில் 2004-ல் பெலிஸ், புளோரிடா மாகாணத்திலும் தென்னையில் கண்டறியப்பட்ட சுருள் வெள்ளை ஈ, இந்தியாவில் முதல்முறையாக 2016-ம் ஆண்டு பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்னையில் கண்டறியப்பட்டது. இந்த ஈ அனைத்து ரகத் தென்னையிலும் பாதிப்பு ஏற்படுத்தினாலும் சௌகாட் ஆரஞ்சு குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை, மலேசியன் பச்சை குட்டை, நெட்டை, வீரிய ஒட்டு ரகங்களில் அதிக அளவில் தாக்குதலை ஏற்படுத்துகின்றன. இதேபோல் கொய்யா, மா, நாவல், வாழை, வெண்டை, சப்போட்டா, எலுமிச்சை, செம்பருத்தி, சீத்தாபழம், கருவேப்பிலை போன்றவற்றையும் இவை...

தொட்டியில் ரோஜா வளர்ப்பு

  தொட்டியில் ரோஜா வளர்ப்பு முன்னுரை உள்ளங்களை கொள்ளை கொள்ளும் வசீகரமான அழகாலும், நீண்ட மலர்க் காம்புகளில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் வனப்பாலும், ‘மலர்களின் ராணி’ என்று சிறப்பித்துக் கூறப்படும் ரோஜா மலரானது, முக்கியமான ஒரு அழகு மலர்ப்பயிராகும். பெரிய பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள் வீட்டுத் தோட்டங்களிலும் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் தொட்டிகளில் வளர்ந்து, மலர்ந்த  ரோஜாக்கள், நடைபாதைகளின் இரு பக்கங்களிலும், வராண்டா, போர்டிக்கோ, மாடிப்பகுதி என வீட்டின் பல்வேறு பகுதிகளில் பலவாறு வைக்கப்பட்டு அழகு சேர்க்கப் பயன்படுகின்றன. இத்தகைய கவின்மிகு ரோஜாவை தொட்டிகளில் வளர்க்கும் நுட்பங்களை இங்குக் காண்போம். தொட்டி வளர்ப்புக்கு உகந்த குணாதிசயங்கள் மிக உயரமாக வளராததாகவும், ஒழுங்காக எல்லாப் பக்கங்களிலும் கிளைகளைப் பரப்பி அதிகமாகப் பூக்கும் தன்மையுடைய ரகங்களையே  தொட்டிகளில் வளர்க்கத் தேர்ந்தெடுக்க வேண்டும். வளர்ந்த ரோஜாச் செடியானது நடுத்தர உயரத்தில் ஒழுங்கான வட்ட வடிவமுடன் இருக்க வேண்டும். செடிகளை நடவுச் செய்வதற்கு 10-14 இன்ச் அளவுள்ள தொட்டிகளை தேர்வு செய்து நட வேண்...

ரசாயனங்கள் இல்லாமலே பூச்சித் தொல்லைக்கு `குட்பை' சொல்லுங்க

  ரசாயனங்கள் இல்லாமலே பூச்சித் தொல்லைக்கு `குட்பை' சொல்லுங்க... இயற்கை விவசாயம் காட்டும் வழிகள்! இயற்கை விவசாயத்தில் பெருமளவு உபயோகிக்கப்படும் செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள், ஹார்மோன்கள் மற்றும் தீவனச் சேர்க்கைகள் போன்ற செயற்கை இடுபொருள்களைத் தவிர்த்து, பயிர் சுழற்சி, பயிர் கழிவுகள், கால்நடைகளின் எருக்கள், பண்ணைக்கு வெளியே கிடைக்கும் அங்ககக் கழிவுகள், கனிம பாறை சேர்க்கைகள், உயிரியல் அமைப்பு சார்ந்த பயிர் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பெயர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிச் செய்வதே அங்கக விவசாயம் ஆகும். இயற்கை விவசாயத்தில் பூச்சியைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர அழிக்க முடியாது. அதனால் பயிர் சுழற்சி, பசுந்தாள் உரம், பூச்சி எதிர்ப்பு பயிர்வகைகள் போன்ற வகைகளில் சுற்றுச்சூழலை மாறுபடச் செய்து பூச்சிகளைத் தவிர்க்கலாம். இயற்கை விவசாயத்தில் பூச்சி மேலாண்மையின் அவசியம் என்ன? இயற்கை பூச்சி எதிரிகளைக் காக்க நாம் வயல் ஓரங்களில் புதர்வேலி மற்றும் மரவரிசை அமைக்கலாம். இயற்கை பூச்சித்தடுப்புகளான பூச்சி வேட்டையாடிகள் ஒட்டுண்ணிகள், நோய்க்கிருமிகள் போன்றவற்றை வயலில் சரியான நேரத்தில் விடலாம். மேலும், இனக...

தமிழ்நாடு விவசாயம்: அதிக வருவாய் தரும் விதைப்பண்ணை அமைப்பது எப்படி?

  தமிழ்நாடு விவசாயம்: அதிக வருவாய் தரும் விதைப்பண்ணை அமைப்பது எப்படி? விதைப் பண்ணைகள் மூலம் விவசாயிகள் மேம்பட்ட வருவாய் ஈட்ட முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக நாமக்கல் மாவட்டம் உருவாகியிருக்கிறது. கூடுதல் வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டுமல்லாமல், பருவநிலையும் அவர்கள் விதைப் பண்ணைகளை தேர்வு செய்ய காரணமாக உள்ளது. நெல், நிலக்கடலை, துவரை, பாசிப்பயறு, ஆமணக்கு உள்ளிட்ட அனைத்து பயிர்களின் விதைகளையும் உற்பத்தி செய்து, ஆண்டு முழுவதும் வருமானம் பெறுவதாக இவர்கள் கூறுகின்றனர். தோட்டக்கலை கருவிகள் தொகுப்பு வாங்க  இங்கே கிளிக் செய்யவும் விதைப்பண்ணை அமைப்பது எப்படி? விதைசான்றுத் துறை, விதைச்சட்டம் 1966 பிரிவு 8ன்படி கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்கும் வகையில் 1979ம் ஆண்டு முதல் விதைப்பண்ணை முறை செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் தரமான விதைகளுக்கு சான்று அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் விதைப்பண்ணை திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த விதைப்பண்ணைகளில், மத்திய அரசு அனுமதித்துள்ள விதைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படு...