முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாரம்பரிய களர்ப்பாலை நெல்

 திருவண்ணாமலை கிராமத்தில் பாரம்பரிய களர்ப்பாலை நெல் ரகத்தை காப்பாற்றும் விவசாயிகள்: களர் நிலங்களுக்கு தீர்வா? தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்பதும், அவற்றை மீண்டும் உழவுக்கு கொண்டு வருவதும் பல பகுதிகளில், இயற்கை வேளாண்மை ஆர்வலர்களால் முன்னெடுக்கப்படுகிறது. களர் நிலம், உவர் நிலம், வெள்ளம் சூழும் நிலம் போன்ற குறிப்பிட்ட சில வகை நிலங்களுக்குப் பொருத்தமாக இருப்பதும், அந்த நிலங்களில் விவசாயம் செய்ய இன்றியமையாததாகவும் இருக்கும் பாரம்பரிய நெல் ரகங்கள் மிகச் சில. அப்படி ஒரு ரகம் களர்ப்பாலை. களர், உவர் நிலங்களில் பயிர் செய்ய ஏற்றதாக தமிழ்நாட்டில் இருந்துவந்த ஒரே ரகமான களர்ப்பாலை, அழிவின் விளிம்புக்குச் சென்றுவிட்டது. ஆனால், திருவண்ணாமலை அருகே உள்ள நாகப்பாடி என்ற கிராமத்தில் காலம் காலமாக களர்ப்பாலை பரவலாக பயிர் செய்யப்படுவதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சிவப்பரிசி தரும் களர்ப்பாலையை கடைசியாக காப்பாற்றிக்கொண்டிருக்கும் ஊராக நாகப்பாடி இருப்பதோடு, நாகப்பாடி விவசாயிகள், களர்ப்பாலை விதைகளை பிற மாவட்ட விவசாயிகளுக்கும் வழங்கி வருகின்றனர். களர் நிலத்தை கொண்டுள்ள விவசாயிகளுக்கு நெல் சாகுபட...

கரும்பு ஜூஸ் கிடைச்சா மிஸ் பண்ணாதீங்க!

 கல்லீரல் பாதுகாப்பில் முக்கிய பங்கு… கரும்பு ஜூஸ் கிடைச்சா மிஸ் பண்ணாதீங்க! கரும்புச் சாறு குடிப்பதால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. சக்திவாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக உடல் பல வகையான நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. சாலையோரங்களில் மிக எளிதாக கிடைக்கும் கரும்புச் சாறில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா என்பது இந்தக் கட்டுரையை நீங்கள் படித்த பிறகு தெரிந்து கொள்வீர்கள். முழுமையாக படியுங்கள். கரும்புச்சாறு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் பல நோய்களுக்கு எதிராக உடல் சண்டையிட உதவுகிறது. கரும்புச்சாறு மஞ்சள் காமாலை, இரத்த சோகையை தடுக்க உதவும். பழச்சாறு உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. மக்கள் ஆண்டு முழுவதும் பல வகையான பழச்சாறுகளை குடித்து மகிழ்கின்றனர். சில பழங்களில் ஆரோக்கியத்திற்கு நல்ல சாறு உள்ளது. சத்துக்கள் அதிகம் உள்ள கரும்பு, பல வழிகளில் நமக்கு பலன் தரும். கரும்பு குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் கோடையில் குளிர்ச்சியையும் தருகிறது. இனிப்புச் சுவை இருந்தாலும், கரும்புச் சாறு ஒப்பீட்டளவில் குறைந்த கொழுப்பு உள்ளடக்கத்தைக் க...

விவசாயிகளுக்கு 8 வகையான மானியங்கள்

  விவசாயிகளையும் விவசாயத்தையும் ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசு விவசாயிகளுக்கு 8 வகையான  மானியங்களை வழங்குகிறது. மத்திய அரசு உரம், நீர்ப்பாசனம், விவசாய உபகரணங்கள், விவசாயம் செய்வதற்கான நிதி, விதை மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு மானியங்களை வழங்குகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% விவசாய மானியங்களாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கான மொத்த மானியம் அவர்களின் விவசாய வருமானத்தில் 21% ஆக உள்ளது. நாளுக்கு நாள் விவசாயம் நலிவடைந்து வரும் தொழிலாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகள், தேவையான நவீன முறைகளையும் பாரம்பரிய முறைகளையும் விவசாயத்தை மேம்படுத்துவதோடு மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் குறித்து தெரிந்துகொண்டு அவற்றை பெற்று பயனடைய வேண்டும். இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களில் மொத்தம் 8 வகை மானியங்கள் உள்ளன. அந்த மானியங்களைப் பற்றி விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும். விதை மானியம் உரம் மானியம் நீர்ப்பாசன மானியம் மின்சார மானியம் ஏற்றுமதி மானியம் கடன் மானியம் விவசாய உபகரணங்கள் மானியம் விவசாய உள்கட்டமைப்பு மானியம் விதை மானியம் அ...