முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

விவசாயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மஞ்சள் விவசாயம்: நடவு முதல் அறுவடை வரையான முழு செயல்முறை

மஞ்சள் விவசாயம்: நடவு முதல் அறுவடை வரையான முழு செயல்முறை.   மஞ்சள் (Turmeric) ஒரு முக்கியமான மருத்துவ மற்றும் சமையல் தாவரமாகும். இதன் விவசாயத்தில் நடவு முதல் அறுவடை வரை பல படிகள் உள்ளன.   1. நிலத்தின் தயாரிப்பு  - மஞ்சள் வளர சிறந்த வடிகால் உள்ள வண்டல் மண் அல்லது களிமண் மண் ஏற்றது.   - நிலத்தை 2-3 முறை உழுது, மண்ணை தூளாக்கி, களைகளை அகற்ற வேண்டும்.   - ஹெக்டேருக்கு 25-30 டன் சாணம்/கூளம் போன்ற கரிம உரங்களை சேர்க்கலாம்.   2. நடவு செயல்முறை - விதைத் தேர்வு: ஆரோக்கியமான, நோயற்ற மஞ்சள் கிழங்குகளை (ரைசோம்கள்) விதையாக பயன்படுத்தவும்.   - நடவு நேரம்: மே-ஜூன் மாதங்களில் (மழைக்காலத்தின் தொடக்கம்) நடவு செய்யலாம்.   - நடவு முறை:   - கிழங்குகளை 2-3 கணுக்களுடன் துண்டுகளாக வெட்டி, பூஞ்சைக் கொல்லி (Bavistin) கரைசலில் ஊறவைக்க வேண்டும்.     - வரிசைகளுக்கு இடையே 30-45 செமீ, தாவரங்களுக்கு இடையே 15-20 செமீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.     - 5-7 செமீ ஆழத்தில் நட்டு, மண்ணால் மூடவும்.   3. நீர...

தொட்டியில் ரோஜா வளர்ப்பு

  தொட்டியில் ரோஜா வளர்ப்பு முன்னுரை உள்ளங்களை கொள்ளை கொள்ளும் வசீகரமான அழகாலும், நீண்ட மலர்க் காம்புகளில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் வனப்பாலும், ‘மலர்களின் ராணி’ என்று சிறப்பித்துக் கூறப்படும் ரோஜா மலரானது, முக்கியமான ஒரு அழகு மலர்ப்பயிராகும். பெரிய பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள் வீட்டுத் தோட்டங்களிலும் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் தொட்டிகளில் வளர்ந்து, மலர்ந்த  ரோஜாக்கள், நடைபாதைகளின் இரு பக்கங்களிலும், வராண்டா, போர்டிக்கோ, மாடிப்பகுதி என வீட்டின் பல்வேறு பகுதிகளில் பலவாறு வைக்கப்பட்டு அழகு சேர்க்கப் பயன்படுகின்றன. இத்தகைய கவின்மிகு ரோஜாவை தொட்டிகளில் வளர்க்கும் நுட்பங்களை இங்குக் காண்போம். தொட்டி வளர்ப்புக்கு உகந்த குணாதிசயங்கள் மிக உயரமாக வளராததாகவும், ஒழுங்காக எல்லாப் பக்கங்களிலும் கிளைகளைப் பரப்பி அதிகமாகப் பூக்கும் தன்மையுடைய ரகங்களையே  தொட்டிகளில் வளர்க்கத் தேர்ந்தெடுக்க வேண்டும். வளர்ந்த ரோஜாச் செடியானது நடுத்தர உயரத்தில் ஒழுங்கான வட்ட வடிவமுடன் இருக்க வேண்டும். செடிகளை நடவுச் செய்வதற்கு 10-14 இன்ச் அளவுள்ள தொட்டிகளை தேர்வு செய்து நட வேண்...

ரசாயனங்கள் இல்லாமலே பூச்சித் தொல்லைக்கு `குட்பை' சொல்லுங்க

  ரசாயனங்கள் இல்லாமலே பூச்சித் தொல்லைக்கு `குட்பை' சொல்லுங்க... இயற்கை விவசாயம் காட்டும் வழிகள்! இயற்கை விவசாயத்தில் பெருமளவு உபயோகிக்கப்படும் செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள், ஹார்மோன்கள் மற்றும் தீவனச் சேர்க்கைகள் போன்ற செயற்கை இடுபொருள்களைத் தவிர்த்து, பயிர் சுழற்சி, பயிர் கழிவுகள், கால்நடைகளின் எருக்கள், பண்ணைக்கு வெளியே கிடைக்கும் அங்ககக் கழிவுகள், கனிம பாறை சேர்க்கைகள், உயிரியல் அமைப்பு சார்ந்த பயிர் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பெயர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிச் செய்வதே அங்கக விவசாயம் ஆகும். இயற்கை விவசாயத்தில் பூச்சியைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர அழிக்க முடியாது. அதனால் பயிர் சுழற்சி, பசுந்தாள் உரம், பூச்சி எதிர்ப்பு பயிர்வகைகள் போன்ற வகைகளில் சுற்றுச்சூழலை மாறுபடச் செய்து பூச்சிகளைத் தவிர்க்கலாம். இயற்கை விவசாயத்தில் பூச்சி மேலாண்மையின் அவசியம் என்ன? இயற்கை பூச்சி எதிரிகளைக் காக்க நாம் வயல் ஓரங்களில் புதர்வேலி மற்றும் மரவரிசை அமைக்கலாம். இயற்கை பூச்சித்தடுப்புகளான பூச்சி வேட்டையாடிகள் ஒட்டுண்ணிகள், நோய்க்கிருமிகள் போன்றவற்றை வயலில் சரியான நேரத்தில் விடலாம். மேலும், இனக...

நடவு முதல் மானியம் வரை

  தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட்போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில், இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை குறித்துப் பார்ப்போம். நெல் நிபுணர் அமைப்பு (Paddy Expert System Tamil )  தமிழ்நாட்டின் முக்கியப் பயிரான நெல்லைப் பற்றி அனைத்துத் தகவல்களையும், இந்தச் செயலியின் மூலமாகப் பெற முடியும். இதைக் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் ஹைதராபாத்தில் உள்ள கணினி மேம்பாட்டு மையமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. செல்போனில் இந்தச் செயலி அதிக இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும் என்றாலும், இதை இணைய இணைப்பு இல்லாமல் கூட பயன்படுத்த முடிய...

விவசாயிகளுக்கு 8 வகையான மானியங்கள்

  விவசாயிகளையும் விவசாயத்தையும் ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசு விவசாயிகளுக்கு 8 வகையான  மானியங்களை வழங்குகிறது. மத்திய அரசு உரம், நீர்ப்பாசனம், விவசாய உபகரணங்கள், விவசாயம் செய்வதற்கான நிதி, விதை மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு மானியங்களை வழங்குகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% விவசாய மானியங்களாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கான மொத்த மானியம் அவர்களின் விவசாய வருமானத்தில் 21% ஆக உள்ளது. நாளுக்கு நாள் விவசாயம் நலிவடைந்து வரும் தொழிலாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகள், தேவையான நவீன முறைகளையும் பாரம்பரிய முறைகளையும் விவசாயத்தை மேம்படுத்துவதோடு மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் குறித்து தெரிந்துகொண்டு அவற்றை பெற்று பயனடைய வேண்டும். இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களில் மொத்தம் 8 வகை மானியங்கள் உள்ளன. அந்த மானியங்களைப் பற்றி விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும். விதை மானியம் உரம் மானியம் நீர்ப்பாசன மானியம் மின்சார மானியம் ஏற்றுமதி மானியம் கடன் மானியம் விவசாய உபகரணங்கள் மானியம் விவசாய உள்கட்டமைப்பு மானியம் விதை மானியம் அ...