எலிகள்தொல்லையை கட்டுப்படுத்துவது எப்படி ? ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் அதிகமான எலிகளை இரவில் வேட்டையாடும் பழக்கத்தை கொண்டவை அதை மட்டும் கோட்டங்களை நம் இடத்திற்கு வரவழைக்க ஒரு ஏக்கரில் ஐந்து முதல் எட்டு இடங்களில் 6 அடி முதல் 8 அடி உயரம் கொண்ட T வடிவ குச்சிகளை நட்டு வைப்பதன் மூலம் ஆந்தைகளும் கோட்டான்களும் நிலத்திற்கு வரவழைக்க முடியும். மேலும் ஆந்தை மற்றும் கோட்டான்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை மரப்பெட்டி கொண்டு செய்வதன் மூலம் நிலத்தில் இருக்கும் மரத்தின் உயரமான பகுதிகளில் வைப்பதன் மூலம் ஆந்தை மற்றும் கோட்டான்கள் அங்கு வந்து தங்கி தனது இனப்பெருக்கத்தை செய்யும் பொழுது உங்களுக்கு அதிகமான எலிகளை கட்டுப்படுத்த வசதியாக இருக்கும். கோட்டான் மற்றும் ஆந்தைகள் ஒருமுறை முட்டை வைத்து குஞ்சு பொரித்தவுடன் அதன் குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று எலிகளை உணவாக கொடுக்கும் தேவை இருக்கும் மேலும் தாய் பறவைகளும் எலிகளை மிக கச்சிதமாக வேட்டையாடி கொன்று விடும் இதனால் உயிரியல் முறைப்படி கோட்டான்கள் மற்றும் ஆந்தைகள் மூலம் நம் நிலத்தில் இருக்கும் எலிகளை ...