முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சம்பாவிற்கு பதிலாக காலிபிளவர் : விக்கிரவாண்டி விவசாயிகள் கலக்கல்

  விக்கிரவாண்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் புரட்டாசி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை உள்ள பட்டத்தில் சம்பா நெல்பயிர் சாகுபாடி செய்துகொண்டிருந்த விவசாயிகள் இந்த ஆண்டு போதிய அளவில் பருவ மழை பெய்யாமல் பொய்த்து போனதாலும், கிணறு மற்றும் போர்களில் தண்ணீர் மட்டம் குறைந்து போனதால் விவசாயிகள் சம்பா நெல் பயிரிடாமல், காய்கறி சாகுபடி செய்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர் . விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம், சிறுவள்ளிக்குப்பம் , வாக்கூர், பகண்டை கிராமங்களில் குறைந்த அளவு தண்ணீரில் விளையக் கூடிய பயிராகவும், பணப்பயிரான காலிபிளவர் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த மழையினால் விவசாயிகள் பயிரிட்டிருந்த காலிபிளவர் நன்கு வளர்ந்துள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது. பயிர் நன்கு செழித்துள்ளதால் பெரிய அளவில் பூ பூத்து காலிபிளவர் நல்ல மகசூலை தரும் என எண்ணியுள்ளனர்.மலை பிரதேசங்களில் க விளைவிக்கப்பட்ட காலிபிளவர், முட்டை கோஸ் பயிர்கள் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் சாகுபடி செய்து விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடதக்கது. மாத்தி யோசித்து விவசாயத்தினை மீட்போம் மக்களே!

2 ஏக்கர்... ரூ.1,58,000 நிச்சய வருமானம் கொடுக்கும் நிலக்கடலை!

    நிலக்கடலையுடன் மகேந்திரன் மகசூல் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே காடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மகேந்திரன், இயற்கை முறையில் நிலக்கடலைச் சாகுபடி செய்து வருகிறார். ஒரு மாலைவேளையில் மகேந்திரனைச் சந்திக்கக் காடம்பட்டிக்குச் சென்றோம். கறம்பக்குடி தாண்டி ரெகுநாதபுரத்திலிருந்து காடம்பட்டிக்குச் செல்லும் வழி நெடுகிலும் நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்தன. சில இடங்களில் அறுவடைப் பணியும் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. விவசாய வேலையை முடித்துவிட்டு வந்த மகேந்திரனிடம் பேசினோம்,   “நான் 8-ம் வகுப்பு வரைக்கும்தான் படிச்சிருக்கேன். அப்பாதான் ரொம்ப வருஷமா விவசாயத்தைப் பார்த்துக்கிட்டாரு. அப்பாவுக்குக் கூடமாட ஒத்தாசை பண்ணிக்கிட்டு இருந்தேன். 2014-ம் வருஷம் வெளிநாடு போக வாய்ப்பு கிடைச்சது. 5 வருஷம் சிங்கப்பூர்ல வேலை பார்த்தேன். அதற்கப்புறம் 2019-ம் வருஷம் சொந்த ஊருக்கு வந்திட்டேன். நான் வந்ததுக்கப்புறம் அப்பாவுக்கு விவசாய வேலையிலயிருந்து ஓய்வு கொடுத்தாச்சு. முழு நேரமா நான் விவசாயத்துல இறங்கிட்டேன். கற்றுக்கொடுத்த ஆசான்கள் எங்களுக்கு 7 ஏக்கர் நிலம் ...

தொட்டியில் ரோஜா வளர்ப்பு

  முன்னுரை உள்ளங்களை கொள்ளை கொள்ளும் வசீகரமான அழகாலும், நீண்ட மலர்க் காம்புகளில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் வனப்பாலும், ‘மலர்களின் ராணி’ என்று சிறப்பித்துக் கூறப்படும் ரோஜா மலரானது, முக்கியமான ஒரு அழகு மலர்ப்பயிராகும். பெரிய பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள் வீட்டுத் தோட்டங்களிலும் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் தொட்டிகளில் வளர்ந்து, மலர்ந்த  ரோஜாக்கள், நடைபாதைகளின் இரு பக்கங்களிலும், வராண்டா, போர்டிக்கோ, மாடிப்பகுதி என வீட்டின் பல்வேறு பகுதிகளில் பலவாறு வைக்கப்பட்டு அழகு சேர்க்கப் பயன்படுகின்றன. இத்தகைய கவின்மிகு ரோஜாவை தொட்டிகளில் வளர்க்கும் நுட்பங்களை இங்குக் காண்போம். தொட்டி வளர்ப்புக்கு உகந்த குணாதிசயங்கள் மிக உயரமாக வளராததாகவும், ஒழுங்காக எல்லாப் பக்கங்களிலும் கிளைகளைப் பரப்பி அதிகமாகப் பூக்கும் தன்மையுடைய ரகங்களையே  தொட்டிகளில் வளர்க்கத் தேர்ந்தெடுக்க வேண்டும். வளர்ந்த ரோஜாச் செடியானது நடுத்தர உயரத்தில் ஒழுங்கான வட்ட வடிவமுடன் இருக்க வேண்டும். செடிகளை நடவுச் செய்வதற்கு 10-14 இன்ச் அளவுள்ள தொட்டிகளை தேர்வு செய்து நட வேண்டும். தொட்டி வளர்ப்புக்கு...

இயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்யும் முறை!!

  தக்காளி ஒரு முக்கிய காய்கறிப் பயிராக பயிரிடப்படுகிறது. தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் தக்காளி சாகுபடி செய்வதில் ஒரு முதன்மை பயிராக உள்ளது. இயற்கை வழி வேளாண் முறையில் தக்காளி சாகுபடி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம். பருவம் மற்றும் விதை அளவு ஜூன் – ஜூலை, நவம்பர் – டிசம்பர், பிப்ரவரி – மார்ச், மாதங்கள் தக்காளி சாகுபடிக்கு ஏற்ற பருவங்கள் ஆகும். வண்டல் மண்ணில் நல்ல மகசூலை தரும். ஒரு ஹெக்டரில் பயிரிட 400 கிராம் அளவுள்ள விதை போதுமானது. நிலத்தை பண்படுத்துதல்   நிலத்தை நன்றாக  உழவு செய்து வரப்பு ஓரங்களை மண்வெட்டியால் வெட்டி நன்றக களையில்லாமல் வைக்கவும் பின்பு கடைசி உழவின் போது ஒரு ஏக்கருக்கு மக்கிய தொழுவுரம் 10 டன் இடவேண்டும். உயிர் உரம் இடுதல் ஒரு ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம்2 கிலோ, பாஸ்போபாக்டீரியா 2கிலோ, டிரைக்கோடெர்மா விரிடி, 2 கிலோ இவற்றை 200 மக்கிய தொழுவுரம் அல்லது மண்புழு உரத்தில்  நன்றாக கலந்து அவற்றில் ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரையைத் தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரை உயிர் உரக் கலவையில் தெளித்து நன்குபிரட்டி...

நடவு முதல் அறுவடை வரை இஞ்சி சாகுபடி..!

நடவு முதல் அறுவடை வரை இஞ்சி சாகுபடி…! இஞ்சி கடல்மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரம் வரையுள்ள வெப்ப மற்றும் ஈரப்பதமுள்ள உஷ்ண மண்டலப்பகுதிகளில் நன்கு வளரும். பொதுவாக மானாவாரி பயிராகவே சாகுபடி செய்யப்படுகிறது. பயிர் முளைத்துவரும்போது மிதமான மழையளவும் அதன் வளர்ச்சிப்பருவத்தில் அதிக மழையளவு மற்றும் அதிக மழைநாட்கள் மிகவும் அவசியம். நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் நிறைந்த மணல், களிமண் கலந்த குறுமண், சிவப்பு குறுமண் அல்லது லேட்டரைட் குறுமண் நிலங்களில் நன்கு வளரும். இனப்பெருக்கம் இஞ்சி கரணைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு எக்டருக்கு 1500-1800 கிலோ விதை இஞ்சி கரணைகள் தேவைப்படும். இதையும் படிக்கலாமே: தண்டு கீரை சாகுபடி  முறைகள் பருவம் இந்தியாவில் மேற்கு கடலோர பகுதிகளில் இஞ்சி மே மாதங்களிலும், வடகிழக்கு மாநிலங்களில் ஏப்ரல் மாதங்களிலும் இறவைப்பயிராகச் சாகுபடி செய்யும்போது பிப்ரவரி மாத இடையில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் பயிரிடப்பட்டு வருகிறது. வகைகள் சுக்கு உண்டாக்குவதற்கு ஏற்ற வகைகள் – மாரன், நதியா, கரக்கால். அதிக ஒலியோ ரெசினுக்கு – ஏர்நாடு,...

கத்தரியில் காய்ப்புழு கட்டுப்படுத்துவது எப்படி?

  இராமநாதபுரம் மாவட்டத்தில் நைனார்கோவில் வட்டாரத்திற்கு உட்பட்ட பாண்டியூர், அக்கிரமேசி மற்றும் போகலூர் வட்டாரத்தில் மஞ்சக்கொல்லை, மெய்யனேந்தல் போன்ற பகுதிகளில் கத்தரியானது பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. கத்தரிக்காயானது மக்களால் விரும்பி உண்ணப்படும் காய்கறிகளில் மிகவும் முக்கியமானது. அதேசமயத்தில் விவசாயிகளால் அதிக அளவு பூச்சி மருந்து தெளிக்கப்படும் பயிர்களில் கத்தரியும் ஒன்றாகும். கத்தரியில் காய்த்துளைப்பானானது 70 முதல் 92 விழுக்காடு சேதங்களை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டத்தைஏ ற்படுத்துகின்றது. சேத அறிகுறிகள் கத்தரி தண்டு மற்றும் காய்த்துளைப்பான் நடவு செய்த 15ம் நாள் முதல் கத்தரி பயிரினைத் தாக்க ஆரம்பித்து விடுகிறது. வெண்ணிறமான இளம் புழுக்களானது இளம் தண்டுகளை துளையிட்டு குடைந்து சென்று தண்டின் உட்பகுதிகளை உண்ணுகின்றன. இவ்வாறு தாக்கப்பட்ட தண்டுகள் மற்றும் குருத்துகள் வாடிக் காய்ந்து தொங்கி விடுகின்றன. இளம்புழுக்கள் தாக்கிய தண்டின் கணுக்களுக்கு அருகில் புழு குடைந்த துளை காணப்படும். மேலும், இப்புழுக்களானது பூ மொட்டுகள் மற்றும் காய்களையும் துளையிட்டு குடைந்து சென்று சேதங்களை ஏற்...

வெள்ளாடுகளில் சிறந்த இந்திய இனங்கள் மற்றும் நம்ம ஊருக்கு ஏற்ற இனங்கள்.

  வெள்ளாடுகளில் சிறந்த இந்திய இனங்கள் மற்றும் நம்ம ஊருக்கு ஏற்ற இனங்கள். 1.. ஜம்நாபாரி – எட்டாவா மாநிலம், உ.பி 2.. பீட்டல் – பஞ்சாப் 3.. பார்பரி – உ.பி.யின் மதுரா மற்றும் ஆக்ரா பகுதிகள் 4.. தெல்லிச்சேரி மற்றும் மலபாரி – வடகேரளா 5. சுர்தி – குஜராத் 6.. காஷ்மீரி – ஜம்மு காஷ்மீர் 7.. வங்காள ஆடு – மேற்கு வங்காளம் இந்திய சூழலுக்கு ஏற்ற அயல்நாட்டு இனங்கள்: 1.. அங்கோரா, 2.. ஆல்பைன், 3.. சேனன், 4.. டோகன் பர்க், 5.. ஆங்ளோ நுபியன்
நிலம் தயாரித்தல் : மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. சட்டிக் கலப்பையைப் பயன்படுத்தி உழுதபின் 3 அல்லது 4 முறை இரும்புக்கலப்பை அல்லது நாட்டுக் கலப்பையைக் கொண்டு கட்டிகள் நன்கு உடையும் வரை உழவேண்டும். பின்னர் 12.5 டன் தொழு உரம் அல்லது நன்கு மக்கிய தென்னை நார்க்கழிவு இடவேண்டும். விதைநேர்த்தி : ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைகோடெர்மா விரிடியைக் கலக்கவும். இதை விதைக்கும் முன் (சற்று முன்னர்) செய்ய வேண்டும். இது உயிர் உரங்களுடன் கலக்க ஏதுவானது. இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பூஞ்சாணக் கொல்லிகளுடன் கலக்கக்கூடாது. ரைசோபியம் 3 பாக்கெட் (600 கிராம்/எக்டர்), அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட் (600 கிராம்/ எக்டர்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம்/எக்டர்) உயிர் உரங்களை அரிசி கஞ்சியுடன் கலந்து விதைநேர்த்தி செய்யவேண்டும். விதை அளவு : எக்டருக்கு 125 கிலோ விதையினைப் பயன்படுத்த வேண்டும். பெரிய விதை கொண்ட இரகங்களுக்கு விதை அளவில் 15 சதவிகிதம் கூடுதலாக இடவேண்டும். இடைவெளி : செடிக்கு செடி10 செ.மீ இடைவெளியும் பாத்திக்கு பாத்தி 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு பார்த்துக் ...

வட மாநிலங்களில் கிராமப்புற பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும் புதிய கோழி வளர்ப்பு முயற்சிகள்

  கடந்த சில ஆண்டுகளாக மத்திய பிரதேச மாநில கிராமப்புற தலித் மற்றும் பழங்குடியின பெண்கள் வாழ்வில் புதிய கோழி வளர்ப்பு முயற்சிகள் பெரிய அளவிலான பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் கோழி வளர்ப்பவர்கள் நிறுவனத்தின் சார்பில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு நிதி உதவிகளை வழங்கி தங்களின் வீடுகளுக்கு பின்புறம் 500 சதுர அடியில் கறிக் கோழிகள் வளர்க்கத் தேவைப்படும் மூலதனத்தை வழங்கி உதவி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வளர்க்கப்படும் 500 கோழி குஞ்சுகள் சுமார் 23 நாட்கள் பெண்களால் ஒப்பந்த அடிப்படையில் கறிக்கோழிகளாக வளர்க்கப்பட்டு, மீண்டும் ஒப்படைக்கப்படுகிறது. இவ்வாறு கோழிக்குஞ்சுகள் வளர்ப்பது முதல் அவற்றுக்கு தேவைப்படும் உணவு, மருந்துகள் மற்றும் கால்நடை மருத்துவ உதவிகள் மற்றும் வளர்ந்த கோழிகள் கொள்முதல் பணிகளும் முறையே மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய தன்னிறைவு முயற்சிகளுக்கு தேவைப்படும் ரூ.2.5 கோடி மூலதனத்தை “Northern Coal fields” நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் வாயிலாக சுமார் 200 பழங்குடியின பெண்கள் பயன் பெற்று வருகின்றனர். இதனை மேலும் 300 பெண்களுக்கு விர...