நோய்களுக்கு முடிவாகும் முடக்கத்தான் கீரை ஆரோக்கியம் தரும் பல்வேறு கீரை வகைகளுள் ‘முடக்கத்தான்' எனப்படும் இந்த கீரை வகை பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை நீக்கி, நன்மைகளைத் தருகிறது. இந்த அற்புத கீரை பற்றி உமையாள் பாட்டியிடம் கேட்டு அறியலாம் இங்கே! கொல்லைப்புற இரகசியம் தொடர் காலையில் தொடங்கிய மழை விடாமல் அடை மழையாக கொட்டித் தீர்த்து கொண்டிருக்க, குடையைப் பிடித்துக்கொண்டு உமையாள் பாட்டியின் வீட்டிற்குள் தஞ்சமடைந்தேன். முடக்கு வாதத்தை நீக்கும் சக்தி இந்த கீரைக்கு இருக்கறதால, முடக்கத்தை அறுப்பதுன்னு அர்த்தம் வர்ற வகையில இதுக்கு பேர் வச்சிருக்காங்க நம்ம முன்னோர்கள் சென்னையில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்து மக்கள் அவதிப்படும் காட்சிகள் நியூஸ் சேனலில் ப்ரேக்கிங் நியூஸாக ஓடிக்கொண்டிருந்த வேளையில், பாட்டி அடுப்பங்கரையில் சூடான பானம் ஒன்றை தயாரித்துக் கொண்டிருந்தாள். அதிலிருந்து வந்த மணம் எனது ருசி பார்க்கும் ஆவலைத் தூண்ட, அடுப்பங்கரைக்குள் பிரவேசித்தேன். பாட்டி தயாரித்துக் கொண்டிருந்த ‘முடக்கத்தான் கீரை சூப்’ எனது கைகளுக்கு ஒரு குவளையில் வந்ததும், மழைக்கு இதமாக காரசாரமாக இருந்த அந்த முடக...