முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வினைதீர்க்கும் விசாகம்... விரதம் இருப்பது எப்படி?

 விசாக நாளில் முருகனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும். சூரியன் விசாக நட்சத்திரத்தைப் பார்ப்பதன் மூலம் முருகனை வழிபடுவதாக ஐதீகம்.





வைகாசி விசாக நாளில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் படத்தைச் சுத்தம் செய்து, சந்தன குங்குமப் பொட்டு வைத்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் தலைவாழை இலையில், சர்க்கரைப் பொங்கல், தினைமாவு, பால், சித்ரான்னங்கள், பட்சணங்களை நைவேத்யமாகப் படைத்து குத்து விளக்கை ஏற்ற விநாயகப் பெருமானை மஞ்சளில் அல்லது பசுஞ்சாணத்தில் பிடித்து வைத்து பூஜை செய்ய வேண்டும். 

விநாயகர் பூஜை முடிந்தபின் முருகப் பெருமானுக்குரிய நாமங்களைச் சொல்லி அர்ச்சித்து தீபம் காட்டி வழிபட வேண்டும். மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வீட்டிற்கு வந்ததும் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி ஆகியவைகளைப் படிக்க வேண்டும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் இருக்கிறார். அவர் அங்கிருந்து ஏழாம் பார்வையாக விசாக நட்சத்திரத்தைப் பார்க்கிறார். 

விசாக நட்சத்திரத்தின் தேவதை குமரன். அதாவது முருகன். சூரியன் விசாக நட்சத்திரத்தைப் பார்ப்பதன் மூலம் முருகனை வழிபடுவதாக ஐதீகம். எனவேதான், சூரியன் வழிபடும் முருகப்பெருமானை அந்நாளில் விரதமிருந்து நாமும் வழிபட்டு வருகிறோம். விசாக நாளில் முருகனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும். பகை நீங்கி அன்பு பெருகும் சுகம் கிடைக்கும். தீராத வினைகளும், எதிரிகளின் தொல்லைகளும் நீங்கும்.


கருத்துகள்

Popular Posts

விவசாயிகளுக்கு 8 வகையான மானியங்கள்

  விவசாயிகளையும் விவசாயத்தையும் ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசு விவசாயிகளுக்கு 8 வகையான  மானியங்களை வழங்குகிறது. மத்திய அரசு உரம், நீர்ப்பாசனம், விவசாய உபகரணங்கள், விவசாயம் செய்வதற்கான நிதி, விதை மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு மானியங்களை வழங்குகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% விவசாய மானியங்களாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கான மொத்த மானியம் அவர்களின் விவசாய வருமானத்தில் 21% ஆக உள்ளது. நாளுக்கு நாள் விவசாயம் நலிவடைந்து வரும் தொழிலாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகள், தேவையான நவீன முறைகளையும் பாரம்பரிய முறைகளையும் விவசாயத்தை மேம்படுத்துவதோடு மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் குறித்து தெரிந்துகொண்டு அவற்றை பெற்று பயனடைய வேண்டும். இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களில் மொத்தம் 8 வகை மானியங்கள் உள்ளன. அந்த மானியங்களைப் பற்றி விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும். விதை மானியம் உரம் மானியம் நீர்ப்பாசன மானியம் மின்சார மானியம் ஏற்றுமதி மானியம் கடன் மானியம் விவசாய உபகரணங்கள் மானியம் விவசாய உள்கட்டமைப்பு மானியம் விதை மானியம் அ...

நடவு முதல் மானியம் வரை

  தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட்போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில், இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை குறித்துப் பார்ப்போம். நெல் நிபுணர் அமைப்பு (Paddy Expert System Tamil )  தமிழ்நாட்டின் முக்கியப் பயிரான நெல்லைப் பற்றி அனைத்துத் தகவல்களையும், இந்தச் செயலியின் மூலமாகப் பெற முடியும். இதைக் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் ஹைதராபாத்தில் உள்ள கணினி மேம்பாட்டு மையமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. செல்போனில் இந்தச் செயலி அதிக இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும் என்றாலும், இதை இணைய இணைப்பு இல்லாமல் கூட பயன்படுத்த முடிய...

தென்னை மரம் வளர்ப்பு: முழு வழிகாட்டி

  தென்னை மரம் வளர்ப்பு: முழு வழிகாட்டி (Coconut Cultivation Guide in Tamil) தென்னை மரம் (Cocos nucifera) ஒரு பல்நோக்கு மரமாகும், இது பழம், நார், எண்ணெய் மற்றும் தென்னை நீர் ஆகியவற்றிற்காக பயிரிடப்படுகிறது. சரியான முறைகளில் வளர்த்தால், 60-80 ஆண்டுகள் வரை பலன்தரும். 1. தென்னை நடவுக்கான சிறந்த மண் & காலநிலை மண் வகை: வண்டல் மண் (Sandy Loam) - சிறந்த வளர்ச்சிக்கு ஏற்றது. களிமண் (Clay Soil) - நீர் தேங்காத வகையில் வடிகால் செய்ய வேண்டும். pH மதிப்பு: 5.5 - 7.0 (குறைந்த உப்புத்தன்மை). காலநிலை: வெப்பம்: 25°C - 35°C (வெப்பமண்டல/உவர் நிலப்பகுதிகளுக்கு ஏற்றது). மழைப்பொழிவு: 1500-2500 மிமீ/ஆண்டு (நீர் தேங்காத வகையில் பாசனம் தேவை). 2. தென்னை வகைகள் & தேர்வு வகை பயன் பழம் காய்க்கும் காலம் டிஎன்டி (TND) உயர் மகசூல், எண்ணெய் 3-4 ஆண்டுகள் கிஆர் (KR) தென்னை நீர் & பழம் 4-5 ஆண்டுகள் கோபனகன் கடற்கரைப் பகுதிகளுக்கு 5-6 ஆண்டுகள் நாறு தேர்வு: 12-18 மாதம் பழுத்த நாறுகளை தேர்ந்தெடுக்கவும். நோயற்ற, உறுதியான வேர்கள் உள்ளதா பார்க்கவும். 3. நடவு முறைகள் குழி தயாரிப்பு: அளவு: 1m x 1m x 1m. குழிய...