முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வட மாநிலங்களில் கிராமப்புற பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும் புதிய கோழி வளர்ப்பு முயற்சிகள்

 


கடந்த சில ஆண்டுகளாக மத்திய பிரதேச மாநில கிராமப்புற தலித் மற்றும் பழங்குடியின பெண்கள் வாழ்வில் புதிய கோழி வளர்ப்பு முயற்சிகள் பெரிய அளவிலான பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் கோழி வளர்ப்பவர்கள் நிறுவனத்தின் சார்பில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு நிதி உதவிகளை வழங்கி தங்களின் வீடுகளுக்கு பின்புறம் 500 சதுர அடியில் கறிக் கோழிகள் வளர்க்கத் தேவைப்படும் மூலதனத்தை வழங்கி உதவி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வளர்க்கப்படும் 500 கோழி குஞ்சுகள் சுமார் 23 நாட்கள் பெண்களால் ஒப்பந்த அடிப்படையில் கறிக்கோழிகளாக வளர்க்கப்பட்டு, மீண்டும் ஒப்படைக்கப்படுகிறது. இவ்வாறு கோழிக்குஞ்சுகள் வளர்ப்பது முதல் அவற்றுக்கு தேவைப்படும் உணவு, மருந்துகள் மற்றும் கால்நடை மருத்துவ உதவிகள் மற்றும் வளர்ந்த கோழிகள் கொள்முதல் பணிகளும் முறையே மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய தன்னிறைவு முயற்சிகளுக்கு தேவைப்படும் ரூ.2.5 கோடி மூலதனத்தை “Northern Coal fields” நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் வாயிலாக சுமார் 200 பழங்குடியின பெண்கள் பயன் பெற்று வருகின்றனர். இதனை மேலும் 300 பெண்களுக்கு விரிவாக்க செய்யவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது தேசிய சிறு கோழி வளர்ப்போர் முன்னேற்ற அறக்கட்டளை (National small  poultry growers development trust) வாயிலாக நமது நாடு முழுவதும் பல மாநிலங்களில் தலித் மற்றும் பழங்குடியின பெண்களிடம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 12600 தலித் மற்றும் 6000 பழங்குடியின பெண்கள் வாழ்வில் ஒரு பொருளாதார முன்னேற்றத்தை காண உதவி செய்துள்ளது. இவ்வாறு ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் 4800 தலித் மற்றும் பழங்குடியின பெண்கள், அசாம் மாநிலத்தில் 1000 பெண்கள், மகாராஷ்டிரா மாநிலத்தில் 500 பெண்கள், ஒடிசா மாநிலத்தில் 300 பெண்கள் என்று வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் அதிகளவில் பயன் பெற்றுள்ளனர்.

இத்தகைய வறுமை ஒழிப்பு  முயற்சிகளுக்கு முன்னோடியாக தில்லியை தலைமை இடமாக கொண்ட பிரதான் (Pradhan) கடந்த 1993ஆம் ஆண்டில் இத்திட்டத்தை துவக்கியது. இதன் வாயிலாக இன்று மத்திய பிரதேசத்தின் 30 சதவீத கறிக்கோழித் தேவை மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 12 சதவீத கறிக்கோழித் தேவை முறையே சந்திக்கப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் புதிய வணிகப் பெயரில் நகர்ப் புறங்களில் கறிக்கோழி கடைகளை துவங்கவும், மதிப்பு கூட்டி விற்பனை செய்யவும் வணிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அதிகளவு முதலீடுகள் மற்றும் மிகவும் குறைந்தளவு லாபத்தில் மேற்கொள்ளப்படும் இப்புதிய ஆக்கப்பூர்வமான முயற்சிகளை விரிவாக்கம் செய்ய பல தனியார் பங்கு முதலீடுகளை (private equity) பெறும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தலித் மற்றும் பழங்குடியினப் பெண்கள் வாழ்வில் மேற்கொள்ளப்படும் இப்புதிய கோழி வளர்ப்பு முயற்சிகளின் பெருக்கம் கிராமப்புறங்களில் அதிகளவு வேலை வாய்ப்புகள், தொழில் முதலீடுகள், ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

கட்டுரையாளர்:

முனைவர் தி. ராஜ் பிரவின், இணைப் பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.


கருத்துகள்

  1. இந்த செய்தி http://vivasayam.org/2020/09/16/%e0%ae%b5%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/

    இங்கே இருந்து கொண்டு வந்தது. நன்றின்னு ஒரு பெயரை சொல்லி போட்டிருக்கலாம்

    ஆனால் அப்படியே காப்பி எடுத்து செய்வது சரியில்ல

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

Popular Posts

விவசாயிகளுக்கு 8 வகையான மானியங்கள்

  விவசாயிகளையும் விவசாயத்தையும் ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசு விவசாயிகளுக்கு 8 வகையான  மானியங்களை வழங்குகிறது. மத்திய அரசு உரம், நீர்ப்பாசனம், விவசாய உபகரணங்கள், விவசாயம் செய்வதற்கான நிதி, விதை மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு மானியங்களை வழங்குகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% விவசாய மானியங்களாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கான மொத்த மானியம் அவர்களின் விவசாய வருமானத்தில் 21% ஆக உள்ளது. நாளுக்கு நாள் விவசாயம் நலிவடைந்து வரும் தொழிலாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகள், தேவையான நவீன முறைகளையும் பாரம்பரிய முறைகளையும் விவசாயத்தை மேம்படுத்துவதோடு மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் குறித்து தெரிந்துகொண்டு அவற்றை பெற்று பயனடைய வேண்டும். இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களில் மொத்தம் 8 வகை மானியங்கள் உள்ளன. அந்த மானியங்களைப் பற்றி விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும். விதை மானியம் உரம் மானியம் நீர்ப்பாசன மானியம் மின்சார மானியம் ஏற்றுமதி மானியம் கடன் மானியம் விவசாய உபகரணங்கள் மானியம் விவசாய உள்கட்டமைப்பு மானியம் விதை மானியம் அ...

நடவு முதல் மானியம் வரை

  தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட்போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில், இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை குறித்துப் பார்ப்போம். நெல் நிபுணர் அமைப்பு (Paddy Expert System Tamil )  தமிழ்நாட்டின் முக்கியப் பயிரான நெல்லைப் பற்றி அனைத்துத் தகவல்களையும், இந்தச் செயலியின் மூலமாகப் பெற முடியும். இதைக் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் ஹைதராபாத்தில் உள்ள கணினி மேம்பாட்டு மையமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. செல்போனில் இந்தச் செயலி அதிக இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும் என்றாலும், இதை இணைய இணைப்பு இல்லாமல் கூட பயன்படுத்த முடிய...

தென்னை மரம் வளர்ப்பு: முழு வழிகாட்டி

  தென்னை மரம் வளர்ப்பு: முழு வழிகாட்டி (Coconut Cultivation Guide in Tamil) தென்னை மரம் (Cocos nucifera) ஒரு பல்நோக்கு மரமாகும், இது பழம், நார், எண்ணெய் மற்றும் தென்னை நீர் ஆகியவற்றிற்காக பயிரிடப்படுகிறது. சரியான முறைகளில் வளர்த்தால், 60-80 ஆண்டுகள் வரை பலன்தரும். 1. தென்னை நடவுக்கான சிறந்த மண் & காலநிலை மண் வகை: வண்டல் மண் (Sandy Loam) - சிறந்த வளர்ச்சிக்கு ஏற்றது. களிமண் (Clay Soil) - நீர் தேங்காத வகையில் வடிகால் செய்ய வேண்டும். pH மதிப்பு: 5.5 - 7.0 (குறைந்த உப்புத்தன்மை). காலநிலை: வெப்பம்: 25°C - 35°C (வெப்பமண்டல/உவர் நிலப்பகுதிகளுக்கு ஏற்றது). மழைப்பொழிவு: 1500-2500 மிமீ/ஆண்டு (நீர் தேங்காத வகையில் பாசனம் தேவை). 2. தென்னை வகைகள் & தேர்வு வகை பயன் பழம் காய்க்கும் காலம் டிஎன்டி (TND) உயர் மகசூல், எண்ணெய் 3-4 ஆண்டுகள் கிஆர் (KR) தென்னை நீர் & பழம் 4-5 ஆண்டுகள் கோபனகன் கடற்கரைப் பகுதிகளுக்கு 5-6 ஆண்டுகள் நாறு தேர்வு: 12-18 மாதம் பழுத்த நாறுகளை தேர்ந்தெடுக்கவும். நோயற்ற, உறுதியான வேர்கள் உள்ளதா பார்க்கவும். 3. நடவு முறைகள் குழி தயாரிப்பு: அளவு: 1m x 1m x 1m. குழிய...