முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கத்தரியில் காய்ப்புழு கட்டுப்படுத்துவது எப்படி?

 


இராமநாதபுரம் மாவட்டத்தில் நைனார்கோவில் வட்டாரத்திற்கு உட்பட்ட பாண்டியூர், அக்கிரமேசி மற்றும் போகலூர் வட்டாரத்தில் மஞ்சக்கொல்லை, மெய்யனேந்தல் போன்ற பகுதிகளில் கத்தரியானது பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. கத்தரிக்காயானது மக்களால் விரும்பி உண்ணப்படும் காய்கறிகளில் மிகவும் முக்கியமானது.

அதேசமயத்தில் விவசாயிகளால் அதிக அளவு பூச்சி மருந்து தெளிக்கப்படும் பயிர்களில் கத்தரியும் ஒன்றாகும். கத்தரியில் காய்த்துளைப்பானானது 70 முதல் 92 விழுக்காடு சேதங்களை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டத்தைஏ ற்படுத்துகின்றது.


சேத அறிகுறிகள்

கத்தரி தண்டு மற்றும் காய்த்துளைப்பான் நடவு செய்த 15ம் நாள் முதல் கத்தரி பயிரினைத் தாக்க ஆரம்பித்து விடுகிறது. வெண்ணிறமான இளம் புழுக்களானது இளம் தண்டுகளை துளையிட்டு குடைந்து சென்று தண்டின் உட்பகுதிகளை உண்ணுகின்றன. இவ்வாறு தாக்கப்பட்ட தண்டுகள் மற்றும் குருத்துகள் வாடிக் காய்ந்து தொங்கி விடுகின்றன. இளம்புழுக்கள் தாக்கிய தண்டின் கணுக்களுக்கு அருகில் புழு குடைந்த துளை காணப்படும். மேலும், இப்புழுக்களானது பூ மொட்டுகள் மற்றும் காய்களையும் துளையிட்டு குடைந்து சென்று சேதங்களை ஏற்படுத்துகின்றன. தாக்கப்பட்ட கத்தரி பயிரின் தண்டு மற்றும் காயினைப் பிளந்து பார்த்தால் புழு குடைந்து உண்ட தண்டு மற்றும் காய்ப்பகுதியும் அதன் கழிவுகளும், இளம் சிவப்பு நிற புழு மற்றும் முதிர்ச்சியடைந்த புழுவும் உள்ளிருப்பது தெரியும். இதனால் சந்தையில் கத்தரிக்காயின் தரம் குறைவதோடு மட்டுமல்லாமல், காயின் விலையும் குறைந்து விவசாயிகளின் வருமானத்தைக் குறைக்கிறது.

சாதகமான சூழ்நிலை

மிதமான வெப்பநிலையைத் தொடா்ந்த மழைத்தூறல் மற்றும் வறண்ட வானிலை, அதிகரிக்கும் பகல் மற்றும் இரவு நேர வெப்பம், காலை நேர ஈரப்பதம் (>70%) போன்றவை இப்பூச்சிகளின் பெருக்கத்திற்கு சாதகமான காரணிகளாகும்.

வாழ்க்கைப் பருவம்

பெண் அந்துப்பூச்சியானது முட்டைகளை தனித்தனியாக பயிரின் வெவ்வேறு பாகங்களான தண்டுகள், இலைகள், பூக்கள் மற்றும் காய்களில் இட்டுச்செல்கின்றன. புழுக்களானது இளம் சிவப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். புழுவானது 10 முதல் 15 நாட்கள் வரை தண்டுகள் மற்றும் காய்களை சேதப்படுத்தி விட்டு பின்னர் கூட்டுப்புழுவாக மாறிவிடும். பழுப்பு நிறமான கூட்டுப்புழுக்கள் தண்டுகள் மற்றும் காய்களின் மீது ஒட்டிக் கொண்டிருக்கும். தாய் அந்துப்பூச்சியானது வெண்மை நிறமாக இருக்கும். அதனுடைய முன் இறக்கையில் பழுப்பு மற்றும் இளம் சிவப்பு நிற புள்ளிகள் காணப்படும்.

மேலாண்மை முறைகள்

கத்தரி காய்ப்புழுவினை முழுவதுமாக கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம். ஏனெனில் இவை தண்டு மற்றும் காய்ப்பகுதியின் உள்ளே இருந்து கொண்டு சேதத்தினை ஏற்படுத்துவதால் பூச் சிமருந்து தெளித்தாலும் இவற்றை முழுவதுமாக அழிக்க முடிவதில்லை. எனவே ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தினை கடைப்பிடித்தால் இப்பூச்சியின் தாக்குதலைக் குறைக்கலாம்.

 தாக்கப்பட்ட தண்டுகளை துளைகளுக்கு கீழே புழுவுடன் சேர்த்து உடனுக்குடன் கிள்ளி எடுத்து விடவேண்டும். பின்னர் அவற்றை எரித்தோ அல்லது மண்ணில் புதைத்தோ விட வேண்டும்.


பாதிக்கப்பட்ட காய்களை சேகரித்து அழித்து விட வேண்டும்.
வயல்களில் இனக்கவர்ச்சிப் பொறி (லூஸின்லுயூர்) எக்டேருக்கு 12 என்ற அளவில் அமைத்து ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். தாவரப் பூச்சிக்கொல்லியான அசாடிராக்டின் (1 இசி) 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவீதக் கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் தெளித்து காய்த்துளைப்பானின் தாக்குதலைக் குறைக்கலாம்.

சேதம் அதிகமாகும் போது கீழ்கண்ட மருந்துகளில் ஏதாவது ஒன்றினை நடவு நட்ட ஒரு மாதத்திலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளைகளில் கைத்தெளிப்பான் கொண்டு செடி முழுவதும் நன்கு நனையும் படி தெளிக்கவேண்டும்.

 எமாமெக்டின் பென்சோயேட் (5 எஸ்ஜீ) 0.4 கிராம்
 புளுபென்டியமைடு (20 டபிள்யுடீஜீ) 0.75 கிராம்
 தயோடிகார்ப் (75 டபிள்யுபி) 2.0கிராம்
 குயினால்பாஸ் (25 இசி) 1.5 மிலி
 போசலோன் (35 இசி) 1.5 மிலி

ஒரே மருந்தினை திரும்ப திரும்ப அடிக்காமல் மருந்துகளை சுழற்சி முறையில் அடிக்க வேண்டும்.

கருத்துகள்

Popular Posts

விவசாயிகளுக்கு 8 வகையான மானியங்கள்

  விவசாயிகளையும் விவசாயத்தையும் ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசு விவசாயிகளுக்கு 8 வகையான  மானியங்களை வழங்குகிறது. மத்திய அரசு உரம், நீர்ப்பாசனம், விவசாய உபகரணங்கள், விவசாயம் செய்வதற்கான நிதி, விதை மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு மானியங்களை வழங்குகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% விவசாய மானியங்களாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கான மொத்த மானியம் அவர்களின் விவசாய வருமானத்தில் 21% ஆக உள்ளது. நாளுக்கு நாள் விவசாயம் நலிவடைந்து வரும் தொழிலாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகள், தேவையான நவீன முறைகளையும் பாரம்பரிய முறைகளையும் விவசாயத்தை மேம்படுத்துவதோடு மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் குறித்து தெரிந்துகொண்டு அவற்றை பெற்று பயனடைய வேண்டும். இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களில் மொத்தம் 8 வகை மானியங்கள் உள்ளன. அந்த மானியங்களைப் பற்றி விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும். விதை மானியம் உரம் மானியம் நீர்ப்பாசன மானியம் மின்சார மானியம் ஏற்றுமதி மானியம் கடன் மானியம் விவசாய உபகரணங்கள் மானியம் விவசாய உள்கட்டமைப்பு மானியம் விதை மானியம் அ...

நடவு முதல் மானியம் வரை

  தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட்போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில், இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை குறித்துப் பார்ப்போம். நெல் நிபுணர் அமைப்பு (Paddy Expert System Tamil )  தமிழ்நாட்டின் முக்கியப் பயிரான நெல்லைப் பற்றி அனைத்துத் தகவல்களையும், இந்தச் செயலியின் மூலமாகப் பெற முடியும். இதைக் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் ஹைதராபாத்தில் உள்ள கணினி மேம்பாட்டு மையமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. செல்போனில் இந்தச் செயலி அதிக இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும் என்றாலும், இதை இணைய இணைப்பு இல்லாமல் கூட பயன்படுத்த முடிய...

தென்னை மரம் வளர்ப்பு: முழு வழிகாட்டி

  தென்னை மரம் வளர்ப்பு: முழு வழிகாட்டி (Coconut Cultivation Guide in Tamil) தென்னை மரம் (Cocos nucifera) ஒரு பல்நோக்கு மரமாகும், இது பழம், நார், எண்ணெய் மற்றும் தென்னை நீர் ஆகியவற்றிற்காக பயிரிடப்படுகிறது. சரியான முறைகளில் வளர்த்தால், 60-80 ஆண்டுகள் வரை பலன்தரும். 1. தென்னை நடவுக்கான சிறந்த மண் & காலநிலை மண் வகை: வண்டல் மண் (Sandy Loam) - சிறந்த வளர்ச்சிக்கு ஏற்றது. களிமண் (Clay Soil) - நீர் தேங்காத வகையில் வடிகால் செய்ய வேண்டும். pH மதிப்பு: 5.5 - 7.0 (குறைந்த உப்புத்தன்மை). காலநிலை: வெப்பம்: 25°C - 35°C (வெப்பமண்டல/உவர் நிலப்பகுதிகளுக்கு ஏற்றது). மழைப்பொழிவு: 1500-2500 மிமீ/ஆண்டு (நீர் தேங்காத வகையில் பாசனம் தேவை). 2. தென்னை வகைகள் & தேர்வு வகை பயன் பழம் காய்க்கும் காலம் டிஎன்டி (TND) உயர் மகசூல், எண்ணெய் 3-4 ஆண்டுகள் கிஆர் (KR) தென்னை நீர் & பழம் 4-5 ஆண்டுகள் கோபனகன் கடற்கரைப் பகுதிகளுக்கு 5-6 ஆண்டுகள் நாறு தேர்வு: 12-18 மாதம் பழுத்த நாறுகளை தேர்ந்தெடுக்கவும். நோயற்ற, உறுதியான வேர்கள் உள்ளதா பார்க்கவும். 3. நடவு முறைகள் குழி தயாரிப்பு: அளவு: 1m x 1m x 1m. குழிய...