முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாடி தோட்டம் அமைத்து நஞ்சில்லா காய்கறிகள் மற்றும் பழ செடிகள் வளர்க்க ஒரு யோசனை

 கோடை முடிந்து, இதமான பருவ காலம் துவங்கியுள்ளது. வீட்டில் தோட்டம் அமைக்க உகந்த காலம் இது.

வீட்டுத் தோட்டம் அமைப்பதன் மூலம், மாதம் தோறும் காய்கறிகளுக்கு செலவிடும் தொகையை குறைக்கலாம். தோட்டம் அமைப்பதால், உடல் உழைப்பும், மன அமைதியும் கிடைக்கும்.

தோட்டம் அமைக்க இடம் இல்லையே என்று எண்ண வேண்டாம். ஜன்னல் ஓரம், பால்கனி போன்ற இடங்களில் காய்கறி மற்றும் கீரை வகைகளை வளர்க்கலாம்.

Click Here To Buy Grow Bags

மொட்டை மாடியில், மண் தொட்டி அல்லது சாக்கு பையில் வளர்க்கலாம். கம்பவுண்டு சுவர்களில் சின்ன சின்ன தொட்டிகளை வைத்து, கீரை வகைகளை வளர்க்க முடியும்.

வீட்டு தோட்ட விவசாய முறை இன்று, உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது.

மாடி தோட்டம் அமைக்கும் முன், மாடியில், தண்ணீர் எந்த வட்டத்தில் போகிறது என்று பார்த்து, அதற்கு எதிர் புறத்தில் தோட்டம் அமைக்க வேண்டும். அப்போது தான், செடிகளில் அதிகப்படியான தண்ணீர் தேங்காமல், வழிந்தோடி விடும்.

தோட்டம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் செங்கல் அடுக்கி, அதன் மீது கனமான பலகை அல்லது 'சிமென்ட் சிலாப்' வைத்து, தொட்டிகளை வைக்கலாம். இப்படி செய்வதால், மொட்டை மாடியில் தண்ணீர் இறங்கி, 'கான்கிரீட்' பாதிக்குமே என்று கவலைப்பட வேண்டாம்.

பழைய சிமென்ட் சாக்குகளில் கூட, செடிகளை வளர்க்கலாம். சாக்கின் அடி பகுதியில் தேங்காய் மட்டையை போட்டு, அதன் மேல், மக்கிய இலை தழைகளை, ஒரு அடுக்கு போட வேண்டும்.

Click Here To Buy  Grow Bags

உள்ளே கொள்ளளவில் பாதியளவுக்கு செம்மண், மணல் கலந்த கலவையை இட்டு, 1 கிலோ தொழு உரம், ஒரு கைப்பிடி வேப்பம் புண்ணாக்கு மற்றும் சுண்ணாம்பு துாள் ஆகியவற்றை இட வேண்டும். தேங்காய் மட்டை போடுவதால், தண்ணீர் கீழே வடியாமல் இருப்பதோடு, மண்ணும் உறுதியாக இருக்கும்.

பழைய டயர்கள், பெயின்ட் டப்பாக்கள், ஆயில் டப்பாக்கள், பழைய பக்கெட்டுகள், பழைய ஷூக்கள், வாட்டர் பாட்டில்கள், கண்ணாடி குடுவைகள் மற்றும் கூடைகள் என, மண்ணை கொட்டி வைக்க தகுந்த அனைத்து பொருட்களிலும் பயிர்களை வளர்க்கலாம்.

புதினா, கொத்தமல்லி, கீரைகள் போன்றவற்றை வெட்டி எடுத்து, அந்த வேரை மண்ணில் ஊன்றி வைத்தாலே, வளர்ந்துவிடும்.

Click Here To Buy  Grow Bags

வீட்டு தோட்டத்தைப் பொறுத்தவரை, கத்தரி, வெண்டைக்காய், மிளகாய், தக்காளி, கொத்தவரை போன்ற செடிகளையும்; பாகல், புடலை, பீர்க்கன் போன்ற கொடி வகைகளையும்; தர்பூசணி, சுரை, பூசணி போன்ற தரையில் படரும் கொடி வகைகளையும் பயிரிடலாம். மற்றொன்று, கேரட், முள்ளங்கி, நுாக்கோல், காலி பிளவர், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளையும் பயிர் செய்யலாம்.

கோடை காலத்தில், புடலங்காய், தர்பூசணி, பாகற்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி போன்றவற்றையும்; மழை காலத்தில், அவரை, காராமணி, கொத்தவரங்காய் போன்றவற்றையும்; குளிர் காலத்தில், முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, கேரட், குடமிளகாய் போன்றவற்றுடன், அனைத்து கீரை வகைகளையும் வளர்க்கலாம்.

தக்காளி செடிக்கு நிறைய வெயில் தேவை. மழை காலத்தை விட, வெயில் காலத்தில் நிறைய காய்க்கும். தக்காளியில் நோய் பிரச்னை அவ்வளவாக வராது.

Click Here To Buy  Grow Bags

எத்தனை நாளுக்கு ஒருமுறை நீர் விடுவது?

நாம் செடிகளை எதில் வளர்க்கிறோம் என்பதை பொறுத்து, தண்ணீர் ஊற்றலாம். வெறும் தரையில் எனில், நன்றாக வளர்ந்த செடிகளுக்கு, மூன்று நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீர் விட்டால் போதும்.

செடிகள் வாடி, வெளுத்து போனது போல இருந்தால், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் குறைவாக இருப்பதை புரிந்து கொள்ளலாம்.

இதற்கு, 10 முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து, 10 எலுமிச்சம் பழங்களை பிழிந்து, கூடவே, 250 கிராம் வெல்லத்தையும் சேர்த்து, 15 நாட்களுக்கு மூடி வைக்கவும். இதுதான் முட்டை கரைசல். இதை செடிகளுக்கு தெளிக்கலாம்.

வீட்டு தோட்டத்தில், காய்கறிகள் மட்டுமல்லாமல், துளசி, கற்பூரவல்லி, சோற்றுக்கற்றாழை, கீழாநெல்லி போன்ற மூலிகை செடிகளையும் வளர்ப்பதன் மூலம், மருத்துவ செலவையும் கணிசமாக குறைக்கலாம்.


Click Here To Buy  Grow Bags

நாலு நாள் வெளியூர் போனால், செடிகள் வாடி போய் விடுமே என, கவலைப்பட தேவையில்லை. அந்த கவலையை தேங்காய் மட்டை பார்த்து கொள்ளும். ஒரு வாரத்துக்கு தேவையான நீரை, அது எப்போதும் கிரகித்து வைத்துக் கொள்ளும்.

வீட்டில் நாம் வளர்த்து வரும் பயிர்களுக்கும், கோடை வெயிலின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில், மாடி தோட்ட பயிர்களுக்கான கோடைகால பராமரிப்பில் கவனமாக இருக்க வேண்டும்.

வெயில் சூட்டின் காரணமாக, தொட்டியில் உள்ள நீர் வேகமாக ஆவியாகிவிடும். மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் வேலையை முதலில் செய்ய வேண்டும். 25 முதல் 50 சதவீதம் வரை, நிழல் கொடுக்கும் தன்மை கொண்ட வலை பந்தல் அமைக்க வேண்டும்.

வலை பந்தலுக்கு பதிலாக, புடலை, பாகல், அவரை போன்ற கொடி வகைகளை வளர்த்து, மூங்கில் குச்சிகளால் பந்தல் அமைத்து, அதன் மீது படர விடலாம். இது கொடுக்கும் நிழலே தொட்டி செடிகளுக்கு போதுமானது. கூடவே, கொடி வகை காய்களும் நமக்கு கிடைக்கும்.

Click Here To Buy  Grow Bags

வகை வகையான மல்லிகை கொடிகளை படர விட்டால், பூக்களும் கிடைக்கும்.

குறைந்த இடம் உள்ளவர்கள், அடுக்கு மாடி குடியிருப்புகளில் உள்ளோருக்கு ஏற்றது, உரித்தோட்டம். வீடுகளில், பால்கனி, வராண்டா, ஜன்னல் ஓரங்கள் என, சூரிய ஒளி கிடைக்கும் இடங்களில் தொட்டிகளை தொங்க விட்டு செடிகளை வளர்க்கும் முறையே, உரித்தோட்டம்.

நர்சரிகளில் மாட்டு சாண உரம், மண் புழு உரம் கிடைக்கும். நன்கு மக்க வைக்கப்பட்ட தேங்காய் நார் கலவை கலந்த உரமும் நல்லது.

மண் இறுக்கமின்றி இருப்பதற்கு, மண்ணுடன் மாட்டு சாண உரம் மற்றும் நன்கு மக்கிய தேங்காய் நார் கலவை சேர்த்து கலக்க வேண்டும்.

நர்சரிகளில் கிடைக்கும், 'பஞ்சகவ்யம்' என்ற பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி, ௧ லி., தண்ணீருக்கு, 100 மி.லி., என்ற விகிதத்தில் கலந்து, காய்கறி மற்றும் கீரை செடிகள் மீது நான்கு நாட்களுக்கு ஒருமுறை, 'ஸ்ப்ரே' செய்து வந்தால், பூச்சிகளின் தாக்குதலை தடுக்கலாம்.

  • Suitable for Terrace Gardening
  • Used for Vegetable Plants
  • Size - (15"x15" Inches, 38cms(L) X 38cms(H))


வீட்டுத்தோட்டம், மொட்டை மாடி தோட்டம், சமையலறை தோட்டம், மொட்டை மாடி பாலி ஹவுஸ் தோட்டம் & கூரை மேல் பால்கனி தோட்டம் ஆகியவற்றிற்கு ஏற்றது

பரிமாணம்: 24cms நீளம் x 24 cms அகலம் x 40 cms உயரம்; பொருள்: UV சிகிச்சை பிளாஸ்டிக் பைகள்; அளவு: 8 பேக்; தடிமன்: 550 கேஜ்
இந்த க்ரோ பேக்குகள் குறைந்த இடத்துக்கு இடமளிக்கும் மற்றும் இந்த பைகள் மூலம் பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்களை வளர்க்கலாம்

இந்த க்ரோ பேக்குகளை எளிதாக கழுவி மீண்டும் பயன்படுத்தலாம். சீசன் இல்லாத நேரத்திலோ அல்லது பயன்பாட்டில் இல்லாத சமயத்திலோ க்ரோ பேக்குகளை மடித்து குறைந்த இடத்திலேயே சேமிக்கலாம்

இந்த பைகளில் வடிகால் துளை இருப்பதால் அதிகப்படியான நீர் வெளியேறும். இது வேர்களில் நீர் தேங்குவதைத் தவிர்க்கிறது.





கருத்துகள்

Popular Posts

விவசாயிகளுக்கு 8 வகையான மானியங்கள்

  விவசாயிகளையும் விவசாயத்தையும் ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசு விவசாயிகளுக்கு 8 வகையான  மானியங்களை வழங்குகிறது. மத்திய அரசு உரம், நீர்ப்பாசனம், விவசாய உபகரணங்கள், விவசாயம் செய்வதற்கான நிதி, விதை மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு மானியங்களை வழங்குகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% விவசாய மானியங்களாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கான மொத்த மானியம் அவர்களின் விவசாய வருமானத்தில் 21% ஆக உள்ளது. நாளுக்கு நாள் விவசாயம் நலிவடைந்து வரும் தொழிலாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகள், தேவையான நவீன முறைகளையும் பாரம்பரிய முறைகளையும் விவசாயத்தை மேம்படுத்துவதோடு மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் குறித்து தெரிந்துகொண்டு அவற்றை பெற்று பயனடைய வேண்டும். இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களில் மொத்தம் 8 வகை மானியங்கள் உள்ளன. அந்த மானியங்களைப் பற்றி விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும். விதை மானியம் உரம் மானியம் நீர்ப்பாசன மானியம் மின்சார மானியம் ஏற்றுமதி மானியம் கடன் மானியம் விவசாய உபகரணங்கள் மானியம் விவசாய உள்கட்டமைப்பு மானியம் விதை மானியம் அ...

நடவு முதல் மானியம் வரை

  தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட்போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில், இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை குறித்துப் பார்ப்போம். நெல் நிபுணர் அமைப்பு (Paddy Expert System Tamil )  தமிழ்நாட்டின் முக்கியப் பயிரான நெல்லைப் பற்றி அனைத்துத் தகவல்களையும், இந்தச் செயலியின் மூலமாகப் பெற முடியும். இதைக் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் ஹைதராபாத்தில் உள்ள கணினி மேம்பாட்டு மையமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. செல்போனில் இந்தச் செயலி அதிக இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும் என்றாலும், இதை இணைய இணைப்பு இல்லாமல் கூட பயன்படுத்த முடிய...

தென்னை மரம் வளர்ப்பு: முழு வழிகாட்டி

  தென்னை மரம் வளர்ப்பு: முழு வழிகாட்டி (Coconut Cultivation Guide in Tamil) தென்னை மரம் (Cocos nucifera) ஒரு பல்நோக்கு மரமாகும், இது பழம், நார், எண்ணெய் மற்றும் தென்னை நீர் ஆகியவற்றிற்காக பயிரிடப்படுகிறது. சரியான முறைகளில் வளர்த்தால், 60-80 ஆண்டுகள் வரை பலன்தரும். 1. தென்னை நடவுக்கான சிறந்த மண் & காலநிலை மண் வகை: வண்டல் மண் (Sandy Loam) - சிறந்த வளர்ச்சிக்கு ஏற்றது. களிமண் (Clay Soil) - நீர் தேங்காத வகையில் வடிகால் செய்ய வேண்டும். pH மதிப்பு: 5.5 - 7.0 (குறைந்த உப்புத்தன்மை). காலநிலை: வெப்பம்: 25°C - 35°C (வெப்பமண்டல/உவர் நிலப்பகுதிகளுக்கு ஏற்றது). மழைப்பொழிவு: 1500-2500 மிமீ/ஆண்டு (நீர் தேங்காத வகையில் பாசனம் தேவை). 2. தென்னை வகைகள் & தேர்வு வகை பயன் பழம் காய்க்கும் காலம் டிஎன்டி (TND) உயர் மகசூல், எண்ணெய் 3-4 ஆண்டுகள் கிஆர் (KR) தென்னை நீர் & பழம் 4-5 ஆண்டுகள் கோபனகன் கடற்கரைப் பகுதிகளுக்கு 5-6 ஆண்டுகள் நாறு தேர்வு: 12-18 மாதம் பழுத்த நாறுகளை தேர்ந்தெடுக்கவும். நோயற்ற, உறுதியான வேர்கள் உள்ளதா பார்க்கவும். 3. நடவு முறைகள் குழி தயாரிப்பு: அளவு: 1m x 1m x 1m. குழிய...