முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி;

பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி; அசத்தும் பொறியியல் பட்டதாரி!


தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத பல பாராம்பர்ய நெல் வகைகளை சிவரஞ்சனி தேடிக் கொண்டுவந்து பயிரிட்டுள்ளார் என்பதோடு, ``பாரம்பர்யமான நெல் ரகங்களை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதே எனது இலக்கு" என்றும் உறுதிபடக் கூறுகிறார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான சிவரஞ்சனி. தொலைந்துபோன பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழகத்தில் மட்டுமன்றி இந்திய அளவிலும் தொலைந்த பாரம்பர்ய நெல் ரகங்களை, தன் கணவர் சரவணன் உதவியுடன் தேடிச்சென்று வருகிறார். அவற்றில் பல நெல் ரகங்களைக் கண்டறிந்து தனது வயலிலும் பயிரிட்டுள்ளார்.


வயலில்
வயலில்

இதுபற்றி சிவரஞ்சனியிடம் பேசினோம்.

``பண்டைய காலம் முதல் இந்தியாவில் சுமார் 22,000-க்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்துள்ளதாகத் தெரிகிறது. அவற்றில் மிக மிகக் குறைந்த அளவிலான நெல் ரகங்களையே தற்போது காண முடிகிறது. என் வாழ்நாளில் என்னால் முடிந்தளவு தொலைந்து போன நெல் ரகங்களை மீட்டு விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என உறுதியுடன் உள்ளேன். அஸ்ஸாம், ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா, சத்தீஸ்கர், மணிப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எனது தேடலை விரிவுபடுத்தி இலுப்பைப்பூ, சம்பா, கருங்குருவை,  மடுமுழுங்கி, நவரா, பால்குடவாழை, வெள்ள குடவாழை, செம்புலி பிரியன், கடற்பாலி உள்ளிட்ட பல தொலைந்த பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டுள்ளேன்.


மேலும் தங்கத்தம்பா, சொர்ணமுகி, சொர்ணமல்லி, வாடன் சம்பா, புழுதிக்கார், செங்கல்பட்டு, சிறுமணி, சொர்ணவாரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்களையும் ஊட்டச்சத்துக்களையும் உடைய நெல் ரகங்களையும் பயிரிட்டுள்ளேன்.

எங்களுக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் ஒவ்வொரு நெல் ரகங்களையும் 40 சதுர அடி என்ற அளவில் அவற்றைச் சாகுபடி செய்துள்ளேன். தற்போது அவை நன்றாகக் கதிர் விட்டுள்ளன. இவற்றை அறுவடை செய்து இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விதை நெல்லாக வழங்கவுள்ளேன்" என்றார்.

தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத பல பாராம்பர்ய நெல் வகைகளை சிவரஞ்சனி தேடிக் கொண்டுவந்து பயிரிட்டுள்ளார் என்பதோடு, ``பாரம்பர்யமான நெல் ரகங்களை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதே எனது இலக்கு" என்றும் உறுதிபடக் கூறுகிறார்.



கருத்துகள்

Popular Posts

விவசாயிகளுக்கு 8 வகையான மானியங்கள்

  விவசாயிகளையும் விவசாயத்தையும் ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசு விவசாயிகளுக்கு 8 வகையான  மானியங்களை வழங்குகிறது. மத்திய அரசு உரம், நீர்ப்பாசனம், விவசாய உபகரணங்கள், விவசாயம் செய்வதற்கான நிதி, விதை மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு மானியங்களை வழங்குகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% விவசாய மானியங்களாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கான மொத்த மானியம் அவர்களின் விவசாய வருமானத்தில் 21% ஆக உள்ளது. நாளுக்கு நாள் விவசாயம் நலிவடைந்து வரும் தொழிலாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகள், தேவையான நவீன முறைகளையும் பாரம்பரிய முறைகளையும் விவசாயத்தை மேம்படுத்துவதோடு மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் குறித்து தெரிந்துகொண்டு அவற்றை பெற்று பயனடைய வேண்டும். இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களில் மொத்தம் 8 வகை மானியங்கள் உள்ளன. அந்த மானியங்களைப் பற்றி விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும். விதை மானியம் உரம் மானியம் நீர்ப்பாசன மானியம் மின்சார மானியம் ஏற்றுமதி மானியம் கடன் மானியம் விவசாய உபகரணங்கள் மானியம் விவசாய உள்கட்டமைப்பு மானியம் விதை மானியம் அ...

நடவு முதல் மானியம் வரை

  தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட்போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில், இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை குறித்துப் பார்ப்போம். நெல் நிபுணர் அமைப்பு (Paddy Expert System Tamil )  தமிழ்நாட்டின் முக்கியப் பயிரான நெல்லைப் பற்றி அனைத்துத் தகவல்களையும், இந்தச் செயலியின் மூலமாகப் பெற முடியும். இதைக் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் ஹைதராபாத்தில் உள்ள கணினி மேம்பாட்டு மையமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. செல்போனில் இந்தச் செயலி அதிக இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும் என்றாலும், இதை இணைய இணைப்பு இல்லாமல் கூட பயன்படுத்த முடிய...

தென்னை மரம் வளர்ப்பு: முழு வழிகாட்டி

  தென்னை மரம் வளர்ப்பு: முழு வழிகாட்டி (Coconut Cultivation Guide in Tamil) தென்னை மரம் (Cocos nucifera) ஒரு பல்நோக்கு மரமாகும், இது பழம், நார், எண்ணெய் மற்றும் தென்னை நீர் ஆகியவற்றிற்காக பயிரிடப்படுகிறது. சரியான முறைகளில் வளர்த்தால், 60-80 ஆண்டுகள் வரை பலன்தரும். 1. தென்னை நடவுக்கான சிறந்த மண் & காலநிலை மண் வகை: வண்டல் மண் (Sandy Loam) - சிறந்த வளர்ச்சிக்கு ஏற்றது. களிமண் (Clay Soil) - நீர் தேங்காத வகையில் வடிகால் செய்ய வேண்டும். pH மதிப்பு: 5.5 - 7.0 (குறைந்த உப்புத்தன்மை). காலநிலை: வெப்பம்: 25°C - 35°C (வெப்பமண்டல/உவர் நிலப்பகுதிகளுக்கு ஏற்றது). மழைப்பொழிவு: 1500-2500 மிமீ/ஆண்டு (நீர் தேங்காத வகையில் பாசனம் தேவை). 2. தென்னை வகைகள் & தேர்வு வகை பயன் பழம் காய்க்கும் காலம் டிஎன்டி (TND) உயர் மகசூல், எண்ணெய் 3-4 ஆண்டுகள் கிஆர் (KR) தென்னை நீர் & பழம் 4-5 ஆண்டுகள் கோபனகன் கடற்கரைப் பகுதிகளுக்கு 5-6 ஆண்டுகள் நாறு தேர்வு: 12-18 மாதம் பழுத்த நாறுகளை தேர்ந்தெடுக்கவும். நோயற்ற, உறுதியான வேர்கள் உள்ளதா பார்க்கவும். 3. நடவு முறைகள் குழி தயாரிப்பு: அளவு: 1m x 1m x 1m. குழிய...