முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எலிகள்தொல்லையை கட்டுப்படுத்துவது எப்படி ?

 எலிகள்தொல்லையை கட்டுப்படுத்துவது எப்படி ?





ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் அதிகமான எலிகளை இரவில் வேட்டையாடும் பழக்கத்தை கொண்டவை அதை மட்டும் கோட்டங்களை நம் இடத்திற்கு வரவழைக்க ஒரு ஏக்கரில் ஐந்து முதல் எட்டு இடங்களில் 6 அடி முதல் 8 அடி உயரம் கொண்ட T வடிவ குச்சிகளை நட்டு வைப்பதன் மூலம் ஆந்தைகளும் கோட்டான்களும் நிலத்திற்கு வரவழைக்க முடியும். மேலும் ஆந்தை மற்றும்  கோட்டான்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை மரப்பெட்டி கொண்டு செய்வதன் மூலம் நிலத்தில் இருக்கும் மரத்தின் உயரமான பகுதிகளில் வைப்பதன் மூலம்  ஆந்தை மற்றும் கோட்டான்கள் அங்கு வந்து தங்கி தனது இனப்பெருக்கத்தை செய்யும் பொழுது உங்களுக்கு அதிகமான எலிகளை கட்டுப்படுத்த வசதியாக இருக்கும்.

 கோட்டான் மற்றும் ஆந்தைகள் ஒருமுறை முட்டை வைத்து குஞ்சு பொரித்தவுடன் அதன் குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று எலிகளை உணவாக கொடுக்கும் தேவை இருக்கும் மேலும் தாய் பறவைகளும் எலிகளை மிக கச்சிதமாக வேட்டையாடி கொன்று விடும் இதனால் உயிரியல் முறைப்படி கோட்டான்கள் மற்றும்  ஆந்தைகள் மூலம் நம் நிலத்தில் இருக்கும் எலிகளை அதிக அளவில் கட்டுப்படுத்த முடியும்.

நம்முடைய நிலத்தில் இருக்கிற எலி தொல்லையை குறைப்பதற்கு நம்ம வயல்களில் இருக்கிற வரப்புகளின் உயரத்தையும் அகலத்தையும்  உழைக்க வேண்டும்.

நிலத்தின் வரப்பை  செங்குத்தாக அமைக்காமல் 45 டிகிரி சாய்வாக  அமைப்பின் மூலம் எலி தொல்லையில் இருந்து விடுபட முடியும்.

வயல்களில் இருக்கும் கலைகள் மற்றும் பொருட்களை அகற்றுவதன் மூலம் எலிகள் வயல்களில் தெரியும் பொழுது அதனை பிடிக்கவும் பிடித்து அழிக்கவும் முடியும்.

மிகவும் வளர்ந்த இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருக்கும் விவசாய நிலங்களிலும், கிராமப் பகுதிகளில் இருக்கும் எலிகளை கட்டுப்படுத்தவும், பசுமை குடில் போன்ற மிகப்பெரும் அமைப்புகளுக்குள் இருக்கும் எலிகளை கட்டுப்படுத்தவும் இஸ்ரேலவிவசாயிகள் அந்த இடங்களில் ஆந்தைகள்  வளர்ப்பதன் மூலம் இயற்கை முறையில் எந்தவித தடங்கலுமின்றி எலியை கட்டுப்படுத்த முடிகிறது. இதன் மூலம் எந்த விதமான ரசாயனங்களை பயன்படுத்தாமல், இயற்கையின் உயிர் சங்கிலியின் முறையில்  ஆந்தைகளைக் கொண்டு எலி தொல்லையை கட்டுப்படுத்தி வருகின்றனர்




கருத்துகள்

Popular Posts

விவசாயிகளுக்கு 8 வகையான மானியங்கள்

  விவசாயிகளையும் விவசாயத்தையும் ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசு விவசாயிகளுக்கு 8 வகையான  மானியங்களை வழங்குகிறது. மத்திய அரசு உரம், நீர்ப்பாசனம், விவசாய உபகரணங்கள், விவசாயம் செய்வதற்கான நிதி, விதை மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு மானியங்களை வழங்குகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% விவசாய மானியங்களாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கான மொத்த மானியம் அவர்களின் விவசாய வருமானத்தில் 21% ஆக உள்ளது. நாளுக்கு நாள் விவசாயம் நலிவடைந்து வரும் தொழிலாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகள், தேவையான நவீன முறைகளையும் பாரம்பரிய முறைகளையும் விவசாயத்தை மேம்படுத்துவதோடு மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் குறித்து தெரிந்துகொண்டு அவற்றை பெற்று பயனடைய வேண்டும். இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களில் மொத்தம் 8 வகை மானியங்கள் உள்ளன. அந்த மானியங்களைப் பற்றி விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும். விதை மானியம் உரம் மானியம் நீர்ப்பாசன மானியம் மின்சார மானியம் ஏற்றுமதி மானியம் கடன் மானியம் விவசாய உபகரணங்கள் மானியம் விவசாய உள்கட்டமைப்பு மானியம் விதை மானியம் அ...

நடவு முதல் மானியம் வரை

  தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட்போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில், இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை குறித்துப் பார்ப்போம். நெல் நிபுணர் அமைப்பு (Paddy Expert System Tamil )  தமிழ்நாட்டின் முக்கியப் பயிரான நெல்லைப் பற்றி அனைத்துத் தகவல்களையும், இந்தச் செயலியின் மூலமாகப் பெற முடியும். இதைக் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் ஹைதராபாத்தில் உள்ள கணினி மேம்பாட்டு மையமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. செல்போனில் இந்தச் செயலி அதிக இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும் என்றாலும், இதை இணைய இணைப்பு இல்லாமல் கூட பயன்படுத்த முடிய...

தென்னை மரம் வளர்ப்பு: முழு வழிகாட்டி

  தென்னை மரம் வளர்ப்பு: முழு வழிகாட்டி (Coconut Cultivation Guide in Tamil) தென்னை மரம் (Cocos nucifera) ஒரு பல்நோக்கு மரமாகும், இது பழம், நார், எண்ணெய் மற்றும் தென்னை நீர் ஆகியவற்றிற்காக பயிரிடப்படுகிறது. சரியான முறைகளில் வளர்த்தால், 60-80 ஆண்டுகள் வரை பலன்தரும். 1. தென்னை நடவுக்கான சிறந்த மண் & காலநிலை மண் வகை: வண்டல் மண் (Sandy Loam) - சிறந்த வளர்ச்சிக்கு ஏற்றது. களிமண் (Clay Soil) - நீர் தேங்காத வகையில் வடிகால் செய்ய வேண்டும். pH மதிப்பு: 5.5 - 7.0 (குறைந்த உப்புத்தன்மை). காலநிலை: வெப்பம்: 25°C - 35°C (வெப்பமண்டல/உவர் நிலப்பகுதிகளுக்கு ஏற்றது). மழைப்பொழிவு: 1500-2500 மிமீ/ஆண்டு (நீர் தேங்காத வகையில் பாசனம் தேவை). 2. தென்னை வகைகள் & தேர்வு வகை பயன் பழம் காய்க்கும் காலம் டிஎன்டி (TND) உயர் மகசூல், எண்ணெய் 3-4 ஆண்டுகள் கிஆர் (KR) தென்னை நீர் & பழம் 4-5 ஆண்டுகள் கோபனகன் கடற்கரைப் பகுதிகளுக்கு 5-6 ஆண்டுகள் நாறு தேர்வு: 12-18 மாதம் பழுத்த நாறுகளை தேர்ந்தெடுக்கவும். நோயற்ற, உறுதியான வேர்கள் உள்ளதா பார்க்கவும். 3. நடவு முறைகள் குழி தயாரிப்பு: அளவு: 1m x 1m x 1m. குழிய...